Monday, July 2, 2012

எதிர்பார்த்த படம் RELEASE ஆகபோகுது...


நான் எதிர்பார்த்து கொண்டு இருந்த படம் இப்ப ரிலீஸ் ஆக போகுதுங்க கொஞ்ச நாளைக்கு முன்னாடி அதன் TRAILER அப்ப தாங்க பார்த்தேன் அது வரை அந்த படத்தோட TRAILER பார்க்கவும் இல்ல அந்த படத்தின் மேல் ஒரு எதிர்பார்ப்பும் இல்லை ட்ரைலர் பார்த்த அப்புறம்மா தான் அந்த படம் எப்ப வரும் என
தேடினால்  அந்த படத்தின் போஸ்டர் ஜூன் RELEASE,MAY RELEASE,APRIL RELEASE இருந்தது அட கொடுமையே கொடுமை உறுபுடியா ஒரு DATE சொல்லவே இல்லை போல(ம் பில்லாவுக்கு மட்டும் சொன்னீக பாரு) இவ்வளவு நேரம் ஒரே கதையாய் அளந்து விட்டு என்ன படம் என்றே சொல்லவில்லை பாருங்க அதாங்க மாவீரன் டைரக்டர் S.S.RAJAMOULI இன் நான் ஈ (அந்த நான் எடுத்து விட்டா நம்ம ஜீவா படம்)

   இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது மாவீரன் படம் என்று எல்லாம் சொல்ல மாட்டேன் ட்ரைலர் பார்த்தவுடனே பிடித்து விட்டது.படத்தில் பாட்டு செம்மையா இருந்தது அடடடா இந்த பாட்டு உண்மையில் ரொம்ப சூப்பர்,ஈ டா ஈ டா பாட்டு செம்ம காமெடி இருக்கும் போல... சும்மா சொல்ல கூடாது இந்த படத்தில் சமந்தா சூப்பர்ராய் இருக்கு பயபுள்ள.ஹீரோ செத்து போய் ஒரு ஈ முட்டையில் இருந்து வெளிவரும் காட்சிஅப்படியே செம்ம கிராபிக்ஸ் தெரிகிறது,அப்படியே ஈ அனைத்து இடங்களிலும் கிராபிக்ஸ் காட்சி தெரிது அதை கிராபிக்ஸ் தெரியாத அளவிற்கு செய்து இருக்கலாம்.

ஈ முட்டையில் இருந்து வெளிவரும் காட்சியில் ராட்சத ஈ போல மனிதனை எல்லாம் விட காட்சில்லா மாதிரி பெருசா காட்டுகின்றனர் என பார்த்தா சும்மா சின்னதாய் காட்டுகின்றனர் இவ்வளவு சின்ன ஈ எப்படி வில்லன் அடிக்கும் கொல்லும் என சிரிப்பாய் இருந்தது இது என்னன்னா கார் கவுக்குது இதை கொல்ல சாமியார் அழைத்து வந்து மந்திரம் போடுராணுக,பறவை(பறவை முனியம்மா இல்ல) விட்டு கடிக்க வைக்கின்றனர்,ஒரு ஈ கொல்ல துப்பாக்கியை USE பன்னுராணுக... இந்த ஈ வில்லன் கிட்ட வந்து இந்து  மேல கையை வைத்த கொன்னுடுவேன் என அதோட கையை கழுத்தில் வைத்து சொல்லுவது செம்ம காமெடி...

ஜூலை ஆறு படம் ரிலீஸ் பாக்கணும்...கடைசியா அந்த ஈ குண்டு ஊசியை தூக்கி கொண்டு வந்து வில்லன் கண்ணில் குத்தவரும் சின் சூப்பர்......ஈ கண்டு துங்காமல் கதறி கிட்டு கிடப்பான் பாருங்க(நீங்க மூடுங்க)...சிகரெட் உருட்டி கொண்டு வந்து அவன் பெட் பத்தவைப்பது காமெடி கலக்கல் இருக்கும் போல.லவ் சின் பாக்க தான் எனக்கு ஆசையாய் இருக்கு....

2 comments:

  1. நான் ஈ ட்ரைலேர் வித்தியாசமாக உள்ளது இருந்தும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற வில்லை. திரைக்கு வரட்டும் தங்கள் விமர்சனம் படித்துப் பின் செல்கிறேன் நண்பா

    ReplyDelete
    Replies
    1. மச்சி தமிழ் படத்திற்கு எல்லாம் விமர்சனம் எழுதுவது சந்தேகம் தான் ஏன் விமர்சனம் எழுதுவதே கிடையாது(ஒரே ஒரு படம் மட்டும் எழுதினேன் அதுவும் கன்றாவியா இருந்தது) அதற்காக விமர்சனம் எழுதுவேன் என நினைத்து விட்டீர்களா எனக்கு அந்த அளவிற்கு எல்லாம் அறிவு இல்லை....இந்த படத்தை எல்லாம் மெதுவாய் தியேட்டர் பார்த்து கொள்ளலாம்....

      Delete