Monday, October 8, 2012

பிரபல பதிவரின் வாழ்த்தோடு ஒரு வயசு ஆச்சு..பரவாயில்லை...

இப்ப எதுக்கு லூசு மாதிரி இப்படி டைட்டில் வைத்து இருக்கேன்னு பார்க்குறீங்களா என்ன பண்ணறது நமக்கு ஹாரி சீனு(பிரபலம்) அளவுக்கு யோசிக்கவும் முடியாது எழுதவும் முடியாது அதான் புரியாம தலைப்பு வைத்தால் ரெண்டு தடவை கையை தட்டிவிட்டு வெரி nice(நிகே) நிகேன்னா என்னனு நினைகுரீன்களா nice என்பதை கூகிள் தமிழ் எழுதி மூலம் எழுதினா இப்படி வருது...எதுக்குடா ஒரு வயசு எனக்கு தாங்க இப்ப தான் ஒரு வயசு முடிந்துள்ளது அப்படின்னு சொன்னா என்னா ஆகும்...


என்னோட ப்ளாக் இந்த மாதம் தான் one year ஆரம்பித்து ஆகியுள்ளது எந்த நாள் ஆரம்பித்த என்று எல்லாம் கேட்டு விடாதீர்கள் இந்த மாதம் தான் ஆரம்பித்தேன் என்பது தெரியும் ஆனா நாள் தெரியாது ஏனா முதன் முதலில் போட்ட போஸ்ட் delete பண்ணிவிட்டேன் அதான் தெரியலை எப்படியும் ரெண்டு நாள் முன்னாடியா தான் இருக்கும் அக்டோபர் மாதம் 5 or 6ம் தேதி தான் ஆரம்பித்து இருப்பேன்னு நினைக்கிறன் அதை விடுங்க கருமம் ஏதோ இந்த மாதம் தான் ஆரம்பித்தேன் என தெரியும் அம்புட்டு தான்...

டேய் ஹாரி எல்லோருக்கும் வேணும்டா டேய் அது மெழுகுவர்த்தி டா அதை எண்டா எடுக்குற
இப்ப சுயசரிதை
முதலில் ப்ளாக் என்றாலே என்னவென்று எனக்கு தெரியாது என்னவோ கூகிள் சர்ச் பண்ணும்பொது தமிழ் ப்ளாக் வந்தது அதில போனால் பதிவின் முடிவில் ஒரு ஒட்டு போடுங்கன்னு இருந்துச்சு போனா போகட்டும்னு  இருந்த இன்டலி ஒட்டு பட்டையை கிளிக் பண்ணி பார்த்தால் நெறைய தமிழ் ப்ளாக் இருந்துச்சு அப்புறம் வேற வேலை என்ன ஒரு வாரம் புல்லா இதை படிகறதே வேலை புத்தர்க்கு ஞானம் வந்ததை போல ஒரே வாரத்தில் நாமளும் இதை போல ஆரம்பித்தால் என்ன என நினைத்தேன் ஆனா எப்படி ஆரம்பிப்பது என தெரியலை

ஆரம்பித்தல்
அடுத்த நாள் எப்படி ஒரே நிமிடத்தில் ப்ளாக் ஆரம்பிப்பது புக் வாங்கி படிச்சேன் மூன்று நிமிடத்தில் தான் ப்ளாக் ஆரம்பிக்க முடிந்தது ஏன்னா very very very நாய் slow speed

தலைப்பு
என்ன உரல்(i mean URL) கொடுப்பது என நினைக்கும் பொது நாம தான் தல ரசிகன் ஆச்சே தலபோலவருமான்னு(thlapolavaruma) கொடுத்தா அதை reject செய்தது அச்சோ முதல் அடியிலேயே ஒரு அடி விழுதேன்னு நினைத்து கொண்டு தலபோல(thalapola) வேணாம் தலபோல்(thalapol) ஆரம்பிப்போம் yeah.....சக்சஸ்

முதல் பதிவு
தல அஜித் போட்டோ அப்படின்னு ஹெட் கொடுத்து ரெண்டு போட்டோ போட்டேன் அது தான் முதல் பதிவு ஆனா இப்ப இல்லை டீலீட் பண்ணிட்டேன்

முதல் கமெண்ட்
என்னுடைய முதல் கமெண்ட் திட்டு வாங்கியது தான் ஹி ஹி ஹிந்தி போலோ...போடா செம்மையா போர் அடிக்குது காலையில் ஆறு மணிக்கு போன கரண்ட் ஒரு மணியாகுது இன்னும் வரலை தயவுசெய்து எங்க ஏரியாவில் பவர் கட் பண்ணும் தே...தேவையில்லாம திட்ட வைகுறான் என்னோட கண்ணில் பட்ட கொலை பண்ணிபுடுவேன் யாரை அந்த ஜட்ஜ் தான்...

நிஜமாகவே கடுப்பாய் இருப்பதால் நாளை முடிந்தால் பார்க்கலாம் சுவிட்ச் ஆப் கம்ப்யூட்டர்......

அந்த பிரபல பதிவர் வேற யாரும் இல்லை பிளாக்கர் நண்பன்,சீனு,ஹாரி,ராஜ் தாங்க

20 comments:

  1. தங்கள் ப்ளாக்கிற்கு பிறந்த'மாதம்' வாழ்த்துக்கள்!

    உண்மையிலேயே நீங்க பெரிய ஆள் தான்...

    //சுவிட்ச் ஆப் கம்ப்யூட்டர்......//

    கம்ப்யூட்டர் சுவிட்ச் ஆப் ஆனதுக்கு பிறகும் கீழே ஒரு வரி டைப் பண்ணியிருக்கீங்களே?

    :D :D :D

    ReplyDelete
    Replies
    1. computer switch off இல்லை சட்டௌன் தான் இருக்கு.....

      Delete
  2. வாழ்த்துக்கள் தல....பதிவு எழுத ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆனதுக்கு...
    அப்புறம் அடிக்கடி பதிவு போடுங்க... :)
    இனைந்து இருப்போம்..

    ReplyDelete
    Replies
    1. பவர் இருந்து இருந்தா அடிக்கடி கொசுகடி போல பதிவு போடுறேன் மச்சி டான்

      Delete
  3. வாழ்த்துக்கள்... கிடைக்கத்ததேல்லாம் விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து எழுதுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. எனக்கு இந்த ஒரு வருடத்தில் சிறந்த நண்பர்கள் கிடைத்து உள்ளார்கள் அது போதும்

      Delete
  4. வாழ்த்துக்கள் மச்சி.. ராஜ் சொன்னது போல அடிக்கடி எழுதுங்க.. ரெம்ப கஷ்டமா இருக்கு உங்கள காண்பதே..

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா மச்சிகள்

      Delete
  5. வாழ்த்துக்கள் சின்னா! ஒரு வருஷமாச்சா?? நீங்க சீனியர் தான்! ;)

    ReplyDelete
    Replies
    1. சீனியர் என்றாலும் நீங்க தான் பெரிய ஆளு

      Delete
  6. வாழ்த்துகள்...

    எப்புடிலாம் தலைப்பு யோசிக்கிறீங்க?

    ReplyDelete
  7. THALAPOLVARUMA....தல போனாவருமா....??????

    ReplyDelete
    Replies
    1. போனா வராது நாம தான் அழைத்துகொண்டு வரணும்.....

      Delete
  8. இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  9. பிறந்த மாத வாழ்த்துக்கள் தலிவா.....

    ReplyDelete
  10. மறந்துட்டாங்க போல....சங்கத்து சார்பில் உங்கள் தளத்திற்கு பிறந்த மாத விழா ஒன்றை எடுக்க நினைத்துள்ளோம்...அண்ணனுக்கு நேரமும் பணமும் இருக்கும் பட்சம் தலைவர் ஹாரி,கொ ப செ சீனு,வெளியுறவு துறை அமைச்சர் வரலாறு,ஜனாதிபதி திரு.அரசன் இவர்களை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஓ ஹாரி தான் சங்கத்தின் தலைவரா தொடர்பு கொண்டேன்....

      Delete