Friday, October 21, 2016

ரிலையன்ஸ் ஜியோ, சியோமி, பின்டர்ரெஸ்ட் RELIANCE JIO XIAOMI PINTEREST

ஜியோ, ரிலையன்ஸ்,ரிலையன்ஸ் ஜியோ,THALAPOLVARUMA
ரிலையன்ஸ் ஜியோ ப்ரீவிவ் ஆப்பர்(PREVIEW OFFER) இருந்து வெல்கம் ஆப்பர்(WELCOME OFFER) அனைத்து 4G ஸ்மார்ட்போன்களுக்கும் ரிலையன்ஸ் கொடுத்தனர்.இந்த வெல்கம் ஆப்பர் டிசம்பர் 31  உண்டு அதன் பிறகு டேடாவிற்கு மட்டும் கட்டணம் வசூல் செய்யப்படும் காலிங் செய்வதற்கு கட்டணம் இல்லை என்று அறிவித்து இருந்தனர்.அதனால் சிம் வாங்கவும் அனைத்து ரிலையன்ஸ் டீஎக்ஸ் ஸ்டோர் கூட்டம் கும்மியது.ரேஷன் கடையில் வரிசையில் நிற்காதவன்  கூட இதற்கு நின்னு சிம் கிடைக்காமல் கூட போய் அடுத்த நாள் வந்து நின்றனர்.

ரிலையன்ஸ் ஜியோ (RELIANCE JIO)

              இந்நிலையில் டிசம்பர் 31  வரை கொடுக்கப்பட்டு இருந்த வெல்கம் ஆப்பர் டிசம்பர் 3 வரை மட்டும்மே தர வேண்டும் என இந்திய தொலை தொடர்பு ஆணையம் ட்ராய்(TRAI) அறிவித்துள்ளது.எந்த ஒரு இலவச சேவைகளையும் 90 நாட்களுக்கு மட்டும் தான் கொடுக்க வேண்டும்மாம்.

இதற்க்கு காரணமாய் airtel வோடபோன் ஐடியா இருக்கிரனாறாம்.சில குறிப்பிட்ட மொபைல் மாடல் மட்டும் மற்றும் லைப்(LYF) மாடல் அனைத்திற்கும் என  ஆரம்பத்தில் ப்ரீவிவ் ஆப்பர்(PREVIEW OFFER) கொடுத்தனர்.அதை நம்பி ஒன்னதிற்கும் உதவாத லைப் மொபைல் வாங்கினார்கள்.சிறிது நாட்களிலேயே அனைவருக்கும் என கொண்டுவந்தனர்.

எதற்கும் உதவாத லைப் போன் வாங்கியவர்களுக்கு மட்டும்மாவது  UNLIMITED சேவை கொடுத்து இருக்கலாம்.அவர்களுக்கும் ஒரு நாளைக்கு 4GB  மட்டும் தான் ஆப்பர் என்னும் பெயரில் ஆப்பு வைத்தனர்.எல்லோரும் வாங்காத வரையிலாவது ஸ்பீட்(SPEED) அட்டகாசமாய் இருந்தது.இப்போ ட்ராய் வெளியிட்ட வேகத்தில் ஜியோ தான் இருபதிலேயே SLOW என தெரிவித்துள்ளனர்.இதை பயன்படுத்தும் அனைவரும் அறிவர்.

இனி ஜனவரிக்கு பிறகு இவர்களின் சேவை எப்படி இருக்கும் என பொறுத்து தான் பார்க்க வேண்டும்.ஓசி பயன்படுத்தும் வரையில் ஒன்னும் கஷ்டமில்லை.ஸ்பெக்ட்ரம் ஏலம் வேற அனைவரும் போட்டி போட்டு எடுத்து இருக்கானுங்க பாப்போம் எப்படின்னு.

UPDATE: ஆனால் ஜியோ டிசம்பர் 31 வரை இலவசமாக அழைப்பு மற்றும் இணைய சேவையை தருவதாக அறிவித்துள்ளது.

UPDATE: தற்போது ஜியோ மார்ச் 2017 வரை இலவசமாக அழைப்பு மற்றும் இணைய வசதியை தருவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

சியோமி(XIAOMI)

           
XIAOMI சியோமி ஸ்மார்ட்போன்
 சீனாவை சேர்ந்த சியோமி(XIAOMI) நிறுவனம் இந்தியாவில் கால்வைத்து பெரிய அளவில் வளர்ந்து உள்ளனர்.தற்போது அதிக அளவில் இந்தியாவில் விற்பனை ஆவது சீனா சேர்ந்த நிறுவனங்களின் தொலைபேசிகளே.அதிலும் சியோமி(XIAOMI) ஸ்மார்ட்போன்களே மிக பிரபலம்.

              இந்த மதத்தின் தொடக்கதில் DIWALI FESTIVE OFFER என ஒரு மில்லியன்(ONE MILLION) ஸ்மார்ட்போன் வெறும் 18  நாட்களில் விற்பனை செய்துள்ளனர்.இந்த 1 மில்லியன் ஸ்மார்ட்போன் இ காமர்ஸ் ஆன்லைன் மூலமாக மட்டும்மே விற்பனை செய்யதுள்ளனர்.

            இந்த வருடத்தின் ஆரம்பத்தில் மற்றொரு சீனா நிறுவனமான  ஒப்போ தான் அதிக அளவில் ஸ்மார்ட்போன் விற்பனை செய்த சீன நிறுவனமாய் இருந்தது.இப்போது இந்தியாவிலேயே அதிக ஸ்மார்ட்போன் விற்பனை செய்தவர்களாய் சியோமி(XIAOMI) உள்ளனர்.இந்தியாவில் சியோமி(XIAOMI) தங்களின் தொழிற்சாலை திறக்க உள்ளனர்.

பின்டர்ரெஸ்ட்(PINTEREST)

               
பின்டர்ரெஸ்ட்,PINTEREST,தமிழ்,TAMIL
              பின்டர்ரெஸ்ட்(PINTEREST) இது ஒரு சமுக வலைத்தளம் ஆகும்.இதில் இமேஜ் மட்டும்மே போஸ்ட்டாக போட முடியும். இதன் ஒருமாத ACTIVE USER 150 MILLION  பயனர்களை அடைந்துள்ளது.சென்ற வருடம் 100 MILLION  பயனர்களை ஒரு மாதத்தில் உபயோகபடுத்துபவர்களாய் இருந்தனர்.


கூகிள் வால்பேப்பர்(GOOGLE WALLPAPER)

                  கூகிள் ஆன்ட்ராய்ட் மட்டும் கூகிள் வால்பேப்பர்(GOOGLE WALLPAPER) என புதிய அப்ளிகேஷன் விட்டுள்ளனர்.HD தரத்தில் அழகான பல இமேஜ் உள்ளன.

1 comment:

  1. நல்ல பதிவு சகோ..என்னோட ஐடி கேட்டிங்க போல..
    https://www.facebook.com/thava.kumaran.73

    ReplyDelete